தல அஜித் பட மீம் மூலம் காவல்துறையினர் விழிப்புணர்வு பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நேர்கொண்ட பார்வை'க்கு பிறகு தல அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். தல அஜித்தின் 60வது படமான இதனை Bayview Projects LLP நிறுவனம் சார்பாக போனி கபூர் தயாரிக்கிறார்.

Thala Ajith Viswasam meme, Theni District Police creates awareness for Kavalan App

இந்நிலையில் தேனி மாவட்ட காவல்துறை பொதுமக்களிடம் காவலன் ஆப் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மீம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த மீம் 'விஸ்வாசம்' பட காட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த படத்தில் வில்லன்களால் அஜித்தின் மகளுக்கு ஆபத்து ஏற்பட, உடனே அவர் தனது அம்மாவான நயன்தாராவிற்கு கால் செய்வார். அப்போது அங்கு அஜித் வருவார். அதனை அவரது மகள் நயன்தாராவிடம் தெரிவிக்க, அதற்கு நயன்தாரா, 'இனி நீ கவலப்படாத அவர் பார்த்துக்குவார்' என்பது போன்ற வசனம் இருக்கும்.

இந்த காட்சியை மீமில் மகளிடம் நயன்தாரா, உன் கையில் இருக்கும் Kavalan SOS App பட்டனை அழுத்து, இனி உன்ன யாரும் எதுவும் செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மீமிற்கு ட்விட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Entertainment sub editor