சிவகார்த்திகேயன் பிறந்த நாள் ஸ்பெஷலாக 'டாக்டர்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு கோவாவில் நடைபெற்றுவருவதாக கூறப்பட்டது.

இதுகுறித்து கலை இயக்குநரும் நடிகருமான கிரண் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்திருந்தார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று (பிப்ரவரி 17) மாலை சரியாக 7.07க்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே 'டாக்டர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியான மகிழ்ச்சியில் இருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அயலான் பட ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு நிச்சயம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும்.
இந்த படத்தின் தயாரிப்பில் 24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. சயின்ஸ் ஃபிக்சன் படம் என்று கூறப்படும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
After #Doctor it’s going to be #Ayalaan 👽 pic.twitter.com/UgaRftEXYt
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 17, 2020