ப்ரியா பவானி ஷங்கர் குறித்து ஆச்சர்யம் சொல்லும் எஸ்.ஜே.சூர்யா! - பொம்மை படத்தின் All Details Here.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் பொம்மை படத்தை பற்றி புதிய அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

sj surya priya bhavani shankar bommai movie all details

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொம்மை. மொழி, அபியும் நானும் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதாமோகன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த ப்ரியா பவானி ஷங்கர் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பொம்மை படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வந்தது.

இந்நிலையில் படத்தை பற்றி நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'பொம்மை படத்தின் ஷூட்டிங் முடிந்து பூசணிக்காய் உடைச்சாச்சு, டீசரும் பாடல்களும் விரைவில் வெளியாகும், ராதாமோகனுடன் திருப்திகரமாக இந்த பயணம் அமைந்துள்ளது, யுவன் இதமான பாடல்களை கொடுத்துள்ளார், ப்ரியா பவானி ஷங்கர் உங்களை ஆச்சர்யப்படுத்துவார்' என அவர் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor