ஹீரோ சிவகார்த்திகேயன் - ஆக்ஷன் கிங் அர்ஜூன் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து Hint
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 07, 2019 06:58 PM
கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படம் 'ஹீரோ'. இந்த படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தை இரும்புத்திரை படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளது.
அதில், ஹீரோ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. டிசம்பர் 20 ஆம் தேதி வருகிறோம். ஹீரோ பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவிருக்கிறது. எப்போனு கண்டுபிடிங்க என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Hero final schedule begins with a bang 🔥 December 20, here we come!
Meanwhile, here's an exciting news... #HeroFirstLook coming soon! Any guesses when?@Psmithran @Siva_Kartikeyan @akarjunofficial @AbhayDeol @kalyanipriyan @thisisysr @george_dop @AntonyLRuben @selvavles pic.twitter.com/onmtE0US9c
— KJR Studios (@kjr_studios) August 7, 2019