''BJP கொண்ட பார்வை, காஷ்மீர் மக்கள்....'' - தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் குறித்து பிரபல ஹீரோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 07, 2019 05:23 PM
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து வரும் படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் நாளை(ஆகஸ்ட் 8) ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
இந்த படம் குறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், நேரு கொண்ட பார்வை, காங்கிரஸ் கொண்ட பார்வை, Bjp கொண்ட பார்வை, காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை-
பார்வைகளின் கோணங்கள் நேர்மாறாக 'நேர் கொண்ட பார்வை' மட்டும் பெண்களுக்கான நியாயத்திற்காக!
ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தை ஒப்புக்கொண்ட அஜீத் அவர்களை பாராட்ட அவரின் தலையாய ரசிகர்களோடு நானும்! என்று பதிவிட்டுள்ளார்.
நேரு கொண்ட பார்வை
காங்கிரஸ் கொண்ட பார்வை
Bjp கொண்ட பார்வை
காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை-பார்வைகளின் கோணங்கள் நேர்மாறாக 'நேர் கொண்ட பார்வை' மட்டும் பெண்களுக்கான நியாயத்திற்காக!ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தை ஒப்புக்கொண்ட அஜீத் அவர்களை பாராட்ட அவரின் தலையாய ரசிகர்களோடு நானும்! pic.twitter.com/ScMw9T8Gq0
— R.Parthiban (@rparthiepan) August 7, 2019