வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாகும் சூரி - மற்ற விவரங்கள் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 27, 2019 03:25 PM
வட சென்னை படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு இயக்குநர் வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் அசுரன். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதனையடுத்து இயக்குநர் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம். இந்த படத்தை விண்னைதாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த எல்ரெட் குமார், தனது RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக தயாரிக்கிறார்.
குடும்பமாக அனைவரும் ரசித்து பார்க்கும்படி இப்படம் நகைச்சுவை விருந்தாக அமையுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
Tags : Soori, Vetrimaaran, Elred Kumar