சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் இணையும் படத்தின் சூப்பர் அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 29, 2019 06:54 PM
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘SK16' திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். அதைத் தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனை இயக்கினார். தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK16 திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனு இம்மானுவேல், அர்ர்சனா, ரமா, ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி (எ) நட்ராஜ் நடிக்கவிருப்பதாகவும் நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காரைக்குடியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் தற்போது 90% நிறைவடைந்ததுள்ளதாகவும், தற்போது தேனி மாவட்டத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருவதாகவும் நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்தில் மீதமுள்ள 10% ஷூட்டிங் பணிகள் சென்னையில் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.