சூர்யாவின் தங்கையின் பாடலுக்கு ஜோதிகா செம குத்து டான்ஸ் - வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜோதிகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'ராட்சஷி'. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்திருந்தனர்.

Shero Song released from Suriya and Jyothika's Jackpot

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கௌதம் ராஜ் இயக்கியிருந்தார். இதனையடுத்து ஜோதிகா நடித்து வரும் படம் 'ஜாக்பாட்'.

இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஷீரோ ஷீரோ என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை விவேக் எழுத, சூர்யாவின் சகோதரி பிருந்தா சிவகுமார் மற்றும் சிந்தூரி விஷால் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

சூர்யாவின் தங்கையின் பாடலுக்கு ஜோதிகா செம குத்து டான்ஸ் - வீடியோ இதோ வீடியோ