ஹீரோ சிவகார்த்திகேயன் - ஆக்ஷன் கிங் அர்ஜூன் இணையும் படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 27, 2019 05:17 PM
கடைக்குட்டி சிங்கம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பாண்டிராஜ், சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் அனு இமாணுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நடராஜன், ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு, சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதனையடுத்து இரும்புத்திரை படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க , ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை கேஜேஆர் நிறுவனம் தயாரித்து வருகிறது.
#HeroReleaseDate & #HeroTitleDesign is here! A December release... Let the celebration begin!#Hero @Psmithran @Siva_Kartikeyan @akarjunofficial @AbhayDeol @kalyanipriyan @thisisysr @george_dop @ruben_editor @selvavles @dhilipaction @DoneChannel1 @gobeatroute pic.twitter.com/jkg36mFzdi
— KJR Studios (@kjr_studios) July 27, 2019