லதா ரஜினிகாந்தின் Play School திறப்பு விழாவில் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா..!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 08, 2019 04:48 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நிர்வகித்து வரும் ஆஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பிரபல திரைப்பட இயக்குநர் சிறுத்தை சிவா கலந்துக் கொண்டார்.

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் கடந்த அக்.4ம் தேதி முடித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனிடையே, விஜயதசமியை முன்னிட்டு லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளியின் ஓர் அங்கமாக Freedom ஸ்கூல் திறப்பு விழாவில் பிரபல திரைப்பட இயக்குநர் சிறுத்தை சிவா கலந்து கொண்டுள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.