பிக் பாஸ் சாண்டி, தர்ஷனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 08, 2019 04:05 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இரண்டாவது வெற்றியாளரான டான்ஸ் மாஸ்டர் சாண்டியை நடிகர் சிம்பு நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸிடம் கலாட்டா செய்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டையே கலகலப்பாக வைத்திருந்தவர் சாண்டி. இடையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும், அவர் நடந்துக் கொண்ட விதம் மக்கள் மனதில் சாண்டிக்கான இடத்தை உறுதி செய்தது.
ஆரம்பத்தில் இருந்தே நடிகர் சிம்புவுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் ஒரு கனெக்ட் தொடர்ந்துக் கொண்டிருப்பதை அறிவோம். முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுத்த ஹரிஷ் கல்யாண், இரண்டாவது சீசனில் பங்கேற்ற மகத் ஆகியோருடன் நெருக்கமான நட்பில் இருப்பவர் நடிகர் சிம்பு. இவர்கள் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியே வந்ததும் சிம்புவை சந்தித்து எடுத்துக் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகின.
தற்போது 3வது சீசனிலும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியை சிம்பு நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சமீபத்தில் தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பியுள்ள சிம்பு, சாண்டியை சந்தித்து, அவரை கட்டிப்பிடித்து, தூக்கி சுற்றி உற்சாகப்படுத்தினார். மேலும், சாண்டி குருநாதா என கூறியபடி சிம்புவின் தலையில் தனது அன்பின் வெளிப்பாடாக முத்தத்தை பதித்தார். இந்த சந்திப்பின் போது சாண்டியுடன் தர்ஷனும் இருந்தார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோதே, டாஸ்க் ஒன்றில் ‘மன்மதன்’ சிம்புவாக வேடமிட்டு அவரைப்போலவே நடித்துக் காட்டி சாண்டி உற்சாகப்படுத்தியது தவிர, சிம்புவை போல் அடிக்கடி வசனங்களையும் பேசி ஹவுஸ்மேட்ஸை கலகலக்கச் செய்வார்.
பிக் பாஸ் சாண்டி, தர்ஷனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு! வீடியோ