கடுமையான கோபத்தில் எஸ்.பி.பி வெளியிட்ட வீடியோ பதிவு..! - ''இதனால் என்ன நடக்கலாம் தெரியுமா.?!"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தனது அதிருப்தியை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.

கடுமையான கோபத்தில் எஸ்.பி.பி வெளியிட்ட வீடியோ| singer sp balasubramaniam releases a video condemning fake news of singer janaki

தமிழ் சினிமாவின் புகழ்ப்பெற்ற பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் பல்வேறு மொழிகளில் சேர்த்து, 40 ஆயிரத்திற்கு அதிகமான பாடல்களை பாடியுள்ளார். மேலும் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர், பத்மபூஷன் விருதும் கொடுத்து கௌரவிக்கப்பட்டார். இதுமட்டுமின்றி, திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் எஸ்.பி.பி அண்மையில் நடந்த சம்பவம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். பின்னணி பாடகி எஸ்.ஜானகி அவர்கள், சில தினங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி கிளம்பியது. இதையடுத்து பிரபலங்கள் பலர், ஜானகி அவர்கள் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து எஸ்.பி.பி இதுகுறித்து பேசியுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது, ''காலையில் இருந்து ஜானகி அவர்களின் உடல்நிலையை விசாரித்து எனக்கு ஃபோன் வந்து கொண்டே இருக்கிறது. யாரோ அவர் இறந்துவிட்டார் என தவறான செய்தியை பகிர்ந்திருக்கிறார்கள். என்ன நான்சென்ஸ் இது. அவருடன் நான் பேசினேன். அவர் நலமாக இருக்கிறார். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புவதால், அவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக் கூட வரலாம். அதனால் சமூக வலைதளங்களை இப்படி தவறாக பயன்படுத்தாதீர்கள். அதை பாசிட்டிவாக பயன்படுத்துங்கள். ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள்'' என அவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

கடுமையான கோபத்தில் எஸ்.பி.பி வெளியிட்ட வீடியோ பதிவு..! - ''இதனால் என்ன நடக்கலாம் தெரியுமா.?!" வீடியோ

கடுமையான கோபத்தில் எஸ்.பி.பி வெளியிட்ட வீடியோ| singer sp balasubramaniam releases a video condemning fake news of singer janaki

People looking for online information on S.Janaki, SP Balasubramaniam will find this news story useful.