தர்பார் படத்தின் அறிமுக பாடலை தெறிக்க விடப் போகும் பிரபல பாடகர் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பேட்ட படத்தைத் தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிக்கு பிரபல பாடகர் எஸ்பிபி குரல் கொடுக்க இருக்கிறார்.

SP Balasubramaniam to sing the intro song for Rajinikanth in Darbar

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். முன்னணி இயக்குநர் ஏஆர் முருகதாஸ் முதல் முறையாக ரஜினிகாந்துடன் இணையம் படம் இது.

மும்பையில் நடைபெற்று வந்த இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவு அடைந்துள்ளது. படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.

பிரதிக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் என தர்பார் படத்தில் தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மற்ற திரையுலகில் இருந்தும் நடிகர், நடிகைகள் படக்குழுவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தர்பார் படத்தின் ரஜினிக்கான அறிமுகப் பாடலை அவரது ஆஸ்தான பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேட்ட படத்திலும் ரஜினி அறிமுக பாடலான மரண மாஸ் பாடலை அனிருத்துடன் இணைந்து எஸ்பிபிதான் பாடினார். அந்த பாடல் பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.