''என் பொண்ணு., அப்பா எங்கன்னு கேட்குறா.'' - கலங்கும் பீட்டர் பாலின் முதல் மனைவி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வனிதா விஜயகுமாரின் திருமணம் குறித்து பீட்டர் பாலின் முதல் மனைவி மனம் திறந்து பேசியுள்ளார். 

வனிதா - பீட்டர் பால் திருமணம் - முதல் மனைவி பகீர் தகவல் | peter paul's ex wife opens on vanitha vijaykumar's marriage

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார்.

இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், இவர்களின் திருமணத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து நம்மிடம் பேசிய எலிசபெத் ஹெலன் கூறியதாவது, ''பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. அதனால் இரண்டு முறை அவரை போதை மீட்பு மையத்தில் சேர்த்திருக்கிறோம். மேலும் அவர் இதற்கு முன்னரும் சில பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். இப்போது சரியான வருமாணம் இல்லாததால், வனிதாவை திருமணம் செய்து கொண்டு, செட்டில் ஆகிவிட நினைக்கிறார். அவருக்கு இது பத்தோடு பதினொன்று போலதான்'' என தெரிவித்தார். 

மேலும், ''எனது மகனின் படிப்புக்காகதான் நான் அவரை விட்டு விலகி, எனது அம்மா வீட்டில் இருந்தேன். இப்போது இந்த விஷயம் தெரிந்து அனைவரும் கேள்வி கேட்கிறார்கள். ஏன் அவர்கள் இவ்வளவு சீக்கிரமாக திருமண செய்ய வேண்டும்.?, பெரிய பெரிய வக்கீல்களை வைத்து பார்த்து கொள்வோம் என்று என்னை மிரட்டி கூட பார்த்தார்கள், இப்போது என் மகள் அப்பா இல்லையே என வருத்தப்படுகிறாள். எங்களுக்கு உணர்வுகள் இல்லையா.?!. எனக்கு என் புருஷன் வேண்டும், என் குழந்தைகளுக்கு அப்பா வேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்'' என தெரிவித்தார் ஹெலன். 

''என் பொண்ணு., அப்பா எங்கன்னு கேட்குறா.'' - கலங்கும் பீட்டர் பாலின் முதல் மனைவி. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வனிதா - பீட்டர் பால் திருமணம் - முதல் மனைவி பகீர் தகவல் | peter paul's ex wife opens on vanitha vijaykumar's marriage

People looking for online information on Elisabeth Helen, Peter Paul, Peter Paul Wife, Vanitha, Vanitha Vijaykumar, Vanitha Vijaykumar Marriage will find this news story useful.