அட்றா பிகிலு - Official-ஆக வெளியான தளபதி விஜய்யின் 'சிங்கப் பெண்ணே' பாடல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பாக தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை அட்லி இயக்கி வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Singappenney song out from Thalapathy Vijay - Nayanthara's Bigil

இந்த படத்துக்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி தளபதி விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளாராம். மேலும், இந்த படத்தில் நயன்தாரா, ஏஞ்சல் என்ற வேடத்தில் நடித்துள்ளாராம்.

புட் பாலை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, டேனியல் பாலாஜி, விவேக், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்ற பாடல் இன்று (23.07.2019) வெளியாகியுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அட்றா பிகிலு - OFFICIAL-ஆக வெளியான தளபதி விஜய்யின் 'சிங்கப் பெண்ணே' பாடல் இதோ வீடியோ