பாக்ஸ் ஆபீஸ் மட்டும் இல்ல.. யூடியூப் Records-ம் அடிச்சித் தூக்கும் தல அஜித்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 23, 2019 04:05 PM
அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடல் லிரிக் வீடியோ யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான திரைப்படம் ‘விஸ்வாசம்’. அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுமார் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் படமாக திகழ்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற அப்பா-மகள் பாசத்தை மையப்படுத்திய மெலோடி பாடலான ‘கண்ணான கண்ணே’ பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. பாடலாசிரியர் தாமரை எழுதிய ‘கண்ணான கண்ணே’ பாடல் சூப்பர்ஹிட்டானது. டி.இமான் இசையில் இமான், சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல், மகள்களை பெற்ற அப்பாக்கள் அனைவரும் கொண்டாடினர்.
இந்நிலையில், இப்பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை #70MViewsForKannaanaKanney என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ‘கண்ணான கண்ணே’ பாடலின் சாதனையை கொண்டாடி வருகின்றனர்.
People's favorite mesmerizing #KannaanaKanney storms 70M views in YouTube.#70MViewsForKannaanaKanney #KannaanakanneyBreezes70MViews
▶️ https://t.co/Up25RBvGWA#AjithKumar @directorsiva @immancomposer @sidsriram #Thamarai pic.twitter.com/BcfwdRiREj
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) July 23, 2019
பாக்ஸ் ஆபீஸ் மட்டும் இல்ல.. யூடியூப் RECORDS-ம் அடிச்சித் தூக்கும் தல அஜித் வீடியோ