ரிலீஸுக்கு முன்பே விஜய் படத்தின் ரீமேக் ரைட்ஸை கைப்பற்றிய பாலிவுட் இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த பெரும் வரவேற்பை பெற்ற படம் 'கீதா கோவிந்தம்'. குறிப்பாக இந்த படத்தில் இடம் இன்கேம் இன்கேம் காவாலி என்ற பாடல் ரசிகர்களை கவர்ந்தது.

Karan Johar about Vijay Deverakonda's Dear Comrade

கீதா கோவிந்தம் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் இணைந்து மீண்டும் டியர் காம்ரேட் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். அந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை பரத் கம்மா இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.  இந்த படம் குறித்து பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், வீரியமிக்க ஒரு காதல் கதை. நடிகர்களின் மிகச் சிறப்பான நடிப்பு. குறிப்பாக ஜஸ்டின் பிரபாகரனின் இசை சிறப்பாக இருந்தது.

இந்த படத்தை துல்லியமாக பரத் கம்மா இயக்கியிருக்கிறார். விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா நன்றாக நடித்துள்ளனர்.  அறிவிப்பு என்னவென்றால் இந்த அழகான படத்தின் ரீமேக் உரிமையை தர்மா புரொடக்ஷன் நிறுவனம் பெற்றுள்ளது என்பது தான் என்று குறிப்பிட்டுள்ளார்.