legend others aadi

‘பிகில்’ போடலாமா..? - முதல் சிங்கிள் டிராக் ரிலீஸ் எப்போ தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

The First Single Singappenney from Thalapathy Vijay's Bigil will be releasing on July 23rd

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வரும் ஜூலை.23ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து படத்தின் டீசர், இசை குறித்த தகவல்களை படக்குழு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.