தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' குறித்து 'மன்னன்' ஸ்டைலில் வெளியான மீம் - பிரபல நடிகர் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்தளபதி விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தில் முதல் பாடலான ஒரு குட்டிக் கத, காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு தளபதி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனிருத் பகிர, அது வேற லெவல் வைரலானது.

இந்நிலையில் 'மாஸ்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகரின் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த மீம் 'மன்னன்' படத்தில் இடம் பெற்ற ரஜினி, கவுண்டமணி தியேட்டரில் செய்யும் அட்ராஸிட்டியை ஷாந்தனு மற்றும் இயக்குநர் ரத்னகுமார் ஆகியோரை வைத்து சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை பகிர்ந்த நடிகர் ஷாந்தனு, ''ரத்னகுமார் புரோ, நாம தான் மீம் கிரியேட்டர்ஸ்க்கு கண்டென்ட்னு நினைக்குறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் ஷாந்தனு, மற்றும் இயக்குநர் ரத்னகுமார் இருவரும் அவ்வப்போது 'மாஸ்டர்' படம் குறித்து செய்யும் பதிவுகள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
😂😂🤣🤣 @MrRathna bro namma dhan meme creators ku content nenekren 😂😂 https://t.co/imbPCCnRBt
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) February 13, 2020