சிம்புவின் மாநாடு : படத்தில் அப்பா-மகன் காம்போ - மெர்சலான வில்லன் ! புதிய அப்டேட் இதோ.
முகப்பு > சினிமா செய்திகள்சிம்புவின் மாநாடு படத்தில் இணையும் நட்சத்திரத்தை பற்றி படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்யாணி ப்ரியதர்ஷின் கதாநாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் மாநாடு படத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மனோஜ் பாரதிராஜா தாஜ்மகால், அல்லி அர்ஜுனா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர். ஒரு சில படங்களில் மட்டுமே தலைகாட்டி வந்த இவர், இப்போது சிம்பு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார். மாநாடு படத்தில் மனோஜின் அப்பா பாரதிராஜாவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் இத்திரைப்படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெர்சல் படத்தில் வில்லனாக தோன்றி மிரட்டிய எஸ்.ஜே.சூர்யா, மாநாடு படத்தில் வில்லனாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
Welcome onboard My Dearest Brother @manojkumarb_76 in #Maanaadu@vp_offl @kalyanipriyan @johnmediamanagr #silamparasan TR #str_as pic.twitter.com/MDUjDaTLln
— sureshkamatchi (@sureshkamatchi) February 4, 2020
Welcome onboard one of the fine talented and versatile Actor @iam_SJSuryah in #Maanaadu@vp_offl @kalyanipriyan @johnmediamanagr pic.twitter.com/YumAzinYm6
— sureshkamatchi (@sureshkamatchi) February 4, 2020