சிம்பு பாடிய Don't worry Pullingo - காதலர் தின ட்ரீட்டாக வெளியான பாட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை 'மாநாடு' டீமுடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் சிம்பு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'மாநாடு' படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார்.

STR Sings Don't worry Pullingo for Irumbu Manithan is out

அதன் படி இந்த படத்தில் இயக்குநர் பாராதிராஜாவின் மகனும், பிரபல நடிகருமான மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் போப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர்.  மேலும் இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு, 'இரும்பு மனிதன்' படத்துக்காக பாடிய Don't worry Pullingo என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை நிரஞ்சன் பாரதி எழுதியுள்ளார். 'இரும்பு மனிதன்' படத்தை டிஸ்னி இயக்க, ஷங்கர் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கே.எஸ்.மனோஜ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சிம்பு பாடிய DON'T WORRY PULLINGO - காதலர் தின ட்ரீட்டாக வெளியான பாட்டு வீடியோ

Entertainment sub editor