இசையமைப்பாளராக மாறும் பிரபல பின்னணி பாடகர் சித்ஸ்ரீராம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் ஏற்கனவே எஸ்பிபி, ஜேசுதாஸ், ஜானகி உள்பட பல பின்னணி பாடகர்கள் இசையமைப்பாளர்களாக மாறி ஒருசில திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது பிரபல இளம் பின்னணி பாடகர் சித்ஸ்ரீராம் ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Sid Sriram to make his debut as a composer in Vaanam Kottatum

அதிலும் சித்ஸ்ரீராம் இசையமைக்கும் முதல் படமே மணிரத்னம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் கதை, திரைக்கதையில் அவருடைய உதவியாளர் தனசேகரன் இயக்கவுள்ள திரைப்படம் 'வானம் கொட்டட்டும். விக்ரம்பிரபு, மடோனா நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்

இந்த படத்தில் கோவிந் வசந்தா இசையமைப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் இசையமைக்க சித் ஸ்ரீராம் ஒப்பந்தமாகியுள்ளாராம். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.