ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் படம் பிகில். இந்த படத்துக்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு விவேக் பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்தில் விஜய் அப்பா - மகன் இருவேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் வெறித்தனம் என்ற பாடலை தளபதி விஜய் பாடியுள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடும் முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நீங்க கேட்டீங்க... இதோ ... குடுத்தாச்சு.. இசை எப்படி எப்படி படமாக்கியிருக்காங்க? னு கேக்குறவங்களுக்கு.... 'வெறித்தனம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நீங்க கேட்டீங்க .. இதோ... குடுத்தாச்சு 🤗😍 #SingerVijay
இசை எப்படி? எப்படி பாடியிருக்காங்க? எப்படி படமாக்கியிருக்காங்க? னு கேக்குறவங்களுக்கு ..#Verithanam 😉 pic.twitter.com/mrMj9vKPJF
— Vivek Lyricist (@Lyricist_Vivek) July 8, 2019