இயக்குநர் மணிரத்னம் தனது 'செக்கச்சிவந்த வானம்' படத்துக்கு பிறகு கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் அனுஷ்கா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் நடிக்க, அனுஷ்காவை அணுகியுள்ளதாகவும் ஆனால் அவர் இந்த படத்தில் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், தனது குரு மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.