மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது இந்த கதாபாத்திரத்திலா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் கொண்டாடப்படும் வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ அடுத்து படமாக உருவாக்கப்படுகிறது. மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

Aishwarya Rai Bachchan won’t be seen in a negative role for Maniratnam’s Ponniyin Selvan

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகர்கள் சிலரையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து  ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.

மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் பச்சனை படக்குழு உறுதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நாவலில் மற்ற அனைத்து கதாபாத்திரங்களை விட நந்தினி மிகவும் தனித்துவமாக இருக்கும் தன்மை கொண்டவள். அமைதியாகவும் பரபரப்பின்றியும் காணப்படும் அவள் முகம் அன்பை மட்டுமே வழங்கும் விதமாக பிராகசிக்கும். ஆனால் அவள் பின்னணியில் சோழ அரசை நாசமுறச் செய்யும் வஞ்சனை இருப்பது யாருக்கும் தெரியாது. இதுதான் நந்தினி.

இதை தான் ஐஸ்வர்யா ராய் ஏற்று நடிக்கவுள்ளார். விரைவில் ‘பொன்னியன் செல்வன்’ தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.