யங் டீமிற்காக இதை செய்யும் மணிரத்னம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்படத்துறையில் பல வருட அனுபவம் பெற்றவர் மாலா மணியன். செவன்த் சேனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ், 24 ஏஎம் ஸ்டுடியோஸ் போன்ற முன்னணி பட நிறுவனங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றி அனுபவம் பெற்றவர்.

Maniratnam to Release the Audio Of Madras Frame Hari Krishanan Movie Siragau

இவர் தயாரிப்பாளராகி முதன்முறையாக ஒரு படத்தை தயாரிக்கிறார். படத்தின் பெயர் சிறகு. கவிஞர், பாடலாசிரியை என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி 'சிறகு' படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

மெட்ராஸ், கபாலி, 'சண்டக்கோழி-2', 'வட சென்னை', 'பரியேறும் பெருமாள்' ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற ஹரி கிருஷ்ணன் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்திக்கிறார்.

அக்ஷிதா கதாநாயகியாக நடிக்கிறர். இவர்களுடன் காளி வெங்கட் நடிக்க, மற்றும் டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோரும் நடிக்கின்றனர். அரோல் கரோலி இசை அமைக்கிறார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். அருண் குமார் வி.எஸ். படத்தொகுப்பு செய்கிறார்.

இந்தப்படத்தின் பாடலிசையை ஜூன் 15 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார் மாலா மணியன். சிறகு இசையை மணிரத்னம் வெளியிட உள்ளார்.