மணிரத்னம் - விக்ரம் பிரபு இணையும் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தான் இயக்கும் படங்களை மட்டுமல்லாது பிற இயக்குநர் படங்களையும் தயாரித்துவருகிறார். அந்த வகையில் தன்னுடைய உதவி இயக்குநர் தனா  இயக்கும் படத்தை தயாரிக்கிறார்.

Maniratnam's new movie as a producer Vaanam Kottatum music by Govind

இயக்குநர் தனாவுடன் மணிரத்னமும் கதை வசனம் எழுதி வரும் இந்த படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாராம்.

'வானம் கொட்டட்டும்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு' 96' படத்தின் மூலம் புகழ்பெற்ற கோவிந்த் வசந்தா இசையமைக்க, 'அபியும் நானும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ப்ரீத்தா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்துக்கு கலை இயக்குநராக அமரனும், உடை வடிவமைப்பு பணிகளை ஏகா லகானியும் ஏற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை முதல் துவங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் தனா ஏற்கனவே விஜய் ஜேசுதாஸை ஹீரோவாக வைத்து 'படைவீரன்' படத்தை இயக்கியுள்ளார்.