'செக்கச்சிவந்த வானம்' படத்துக்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் அபியும் நானும், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்த குமாரவேல் மற்றும் ஓகே கண்மணி, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்த சிவா ஆனந்த் ஆகியோர் இந்த படத்தின் திரைக்கதை எழுத்தாளர்கள் குழுவில் அங்கம் வகிக்கின்றனராம்.
இந்த படத்தில் மேலும் சில எழுத்தாளர்கள் அங்கம் வகிக்கின்றனராம். சிவா ஆனந்த் முன்னதாக மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படத்திலும் எழுத்தாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.