www.garudabazaar.com

'கடவுள் என் ப்ரா சைஸை அளவிடுகிறார்' என சர்ச்சை பேச்சு.. BIGGBOSS நடிகை வெளியிட்ட பரபர அறிக்கை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போபால்: 'கடவுள் என் பிரா சைசை அளவிடுகிறார்' என செய்தியாளர்களிடம் பிக்பாஸ் நடிகை பேசியிருப்பது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் நடிகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Shweta Tiwari release apology for BRA GOD remark statement

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான ஸ்வேதா திவாரி, இந்தி படங்களிலும் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். மாடலிங்கிலும் ஸ்வேதா ஈடுபட்டுள்ளார். பெகுசராய், பர்வரிஷ் போன்ற சீரியல்களில் ஸ்வேதா நடித்திருக்கிறார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2011ம் ஆண்டு வெற்றி பெற்றிருக்கிறார். ரோஹித் ராய், திகங்கனா சூர்யவன்ஷி மற்றும் சௌரப் ராஜ் ஜெயின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள "ஷோ ஸ்டாப்பர்" என்ற தனது வலைத் தொடரின் விளம்பரத்தின் போது ஸ்வேதா திவாரி, 'கடவுள் என் பிரா சைசை அளவிடுகிறார்' என பேசியுள்ளார்.

Shweta Tiwari release apology for BRA GOD remark statement

ஊடகவியலாளர்களுடனான உரையாடலின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்தபோது அவரது சக நடிகர்களும் உடனிருந்தனர். ஸ்வேதா திவாரி, "மேரே ப்ரா கி சைஸ் பகவான் லே ரஹே ஹை" என்று கூறி இருந்தார். (கடவுள் என் ப்ராவை அளவிடுகிறார்). ஸ்வேதா திவாரியின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் அவர் தனது உள்ளாடையைப் பற்றி பேசும்போது கடவுளைக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

விஷால் - டிம்பிள் ஹயாதி நடிக்கும் புதிய படம்! வெளியான புதிய ரிலீஸ் தேதி! செம அப்டேட்!

Shweta Tiwari release apology for BRA GOD remark statement

மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா நடிகையின் கருத்தை விசாரித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் நடிகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "சக நடிகரின் முந்தைய மகாபாரத  கண்ணன் கதாபாத்திரத்தை குறிப்பிடும் போது அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்பது எனது கவனத்திற்கு வந்தது. இச்சூழலில் வைத்துப் பார்க்கும்போது, ​​‘பகவான் கண்ணன்’ பற்றிய கூற்று, சௌரப் ராஜ் ஜெயின் நடித்த பிரபலமான தெய்வப் பாத்திரத்தின் பின்னணியில் இருந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்வர். மக்கள் கதாபாத்திரங்களின் பெயர்களை நடிகர்களுடன் தொடர்புபடுத்துகிறார்கள், எனவே, ஊடகங்களுடனான எனது உரையாடலின் போது நான் அதை உதாரணமாகப் பயன்படுத்தினேன். இருப்பினும், இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, பார்க்க வருத்தமாக உள்ளது. நானே ‘பகவானின்’ தீவிர பக்தை என்ற முறையில், உணர்வுகளைப் பெரிதும் புண்படுத்தும் எந்த ஒரு விஷயத்தையும் நான் வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ சொல்லவோ அல்லது செய்யவோ முடியாது. எவ்வாறாயினும், இச்சூழலில் அது தற்செயலாக மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது என்பதை நான் புரிந்துகொண்டேன். எனது வார்த்தைகள் அல்லது செயல்களால் யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமாக இருந்ததில்லை என்பதை தயவுசெய்து உறுதியளிக்கிறேன். எனவே, எனது பேச்சு தற்செயலாக பலருக்கு ஏற்படுத்திய காயத்திற்கு தாழ்மையுடன் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்". என குறிப்பிட்டுள்ளார்.

தீபிகா படுகோன் போட்ருக்குற டிரெஸ் விலை இவ்வளவா? விலையுயர்ந்த Monotone உடையில் HOT போட்டோஷூட்

Shweta Tiwari release apology for BRA GOD remark statement

'மகாபாரதம்' என்ற பிரபல தொலைக்காட்சி தொடரின் நடிகர், புராண நிகழ்ச்சியில் கிருஷ்ணராக நடித்த சவுரப் ஜெயின், வரவிருக்கும் இந்த தொடரில் 'ப்ரா ஃபிட்டர்' வேடத்தில் நடிக்கிறார். பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஸ்வேதா திவாரி, சௌரப்பைக் குறிப்பிட்டு நகைச்சுவையாக கூறியதாக தெரிகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Shweta Tiwari release apology for BRA GOD remark statement

People looking for online information on Actress Shweta Tiwari, Apology for BRA GOD remark, பிக்பாஸ் நடிகை, ஸ்வேதா திவாரி, Bigg Boss Actress, Biggboss, Shweta Tiwari will find this news story useful.