www.garudabazaar.com

விஷால் - டிம்பிள் ஹயாதி நடிக்கும் புதிய படம்! வெளியான புதிய ரிலீஸ் தேதி! செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் விஷால் - டிம்பிள் ஹயாதி நடிக்கும் புதிய படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

vishal veerame vaagai soodum movie new theater release date

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.ப. சரவணன் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ்  ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார். 

vishal veerame vaagai soodum movie new theater release date

அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம். இப்படம் அனைத்து கட்ட பணிகளும் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.  அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதையில்  விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

vishal veerame vaagai soodum movie new theater release date

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,  டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ், Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். வரும் 2022 பிப்ரவரி 4 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது திரையரங்குகளை உறுதி செய்யும் பணியினை செய்து வருகிறது. சில திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவும் துவங்கி உள்ளது. ஏற்கனவே ஜனவரி 26 அன்று வெளியாக வேண்டிய இப்படம், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

vishal veerame vaagai soodum movie new theater release date

 

தொடர்புடைய இணைப்புகள்

vishal veerame vaagai soodum movie new theater release date

People looking for online information on Dimple Hyathi, Veerame Vaagai Soodum, Vishal will find this news story useful.