பிக்பாஸ் Trophy-யை கைப்பற்றிய ராஜூ... அதிகாரப்பூர்வ titlewinner-ஆக அறிவித்த கமல்ஹாசன்! Prize Money எவ்ளோ?
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் ராஜூ வெற்றிபெற்றவராக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் கடைசி இருவர்
முன்னதாக பிக்பாஸ் வீட்டில் இறுதியாக இருந்த ராஜூ மற்றும் பிரியங்கா இருவரிடமும் பிக்பாஸ் பேசினார். அப்போது, சோகம், அழுகை, சிரிப்பு, கோபம் ஆகியவற்றை அளவாக வெளிப்படுத்தினார் ராஜூ. இதே உணர்வுகளை அளவில்லாமல் வெளிப்படுத்தினார் பிரியங்கா என்று சொன்ன பிக்பாஸ், பிரியங்காவுக்கும் ராஜூவுக்கும் தன் வாழ்த்துக்களை கூறியதுடன், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற பின், எப்பவாவது இந்த வீட்டுக்கு வந்தால் வாருங்கள் என்று கூறினார்.
இதேபோல் ராஜூ பற்றி பேசிய பிக்பாஸ்ல், “ராஜூ, நீங்கள் ஒரு எழுத்தாளனாய், இயக்குநராய் நீங்கள் கடந்து வந்த வலி மிகுந்த பாதையில் மலர்ப்படுக்கை விரியட்டும்” என்று சொல்லி வாழ்த்தினார். அதன் பிறகு கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் கமல்ஹாசன்
பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்த கமல்ஹாசன் பிரியங்கா மற்றும் ராஜூ இருவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர்களை பேசிக்கொண்டே பிக்பாஸ் நிகழ்ச்சியின் அரங்கத்துக்கு அனைவர் முன்னிலும் அழைத்து வந்த கமல்ஹாசன் சிறிது நேரம் போக்கு காட்டி விளையாடினார்.
வின்னர், கோப்பை, பணத்தொகை பரிசு
Also Read: பரபரப்பு எலிமினேஷன்!.. 105வது நாள் .. BiggBoss கிராண்ட் ஃபினாலேவில் அறிவித்த கமல்ஹாசன்!
வின்னர் யார்?
வின்னர் யார் என்று அறிவிக்கும் முன் 5 எண்ணலாம் என கமல் கூற, அதற்கிடையில் ராஜூவின் அம்மா டென்ஷனாக இருந்தார். ராஜூவின் மனைவியோ அழுதேவிட்டார். அதன் பிறகு வெடிமுழுக்கத்துடன் பிக்பாஸ் வீட்டின் வின்னராக ராஜூவை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். அவருடைய கையில் கோப்பை கொடுக்கப்பட்டவுடன், அவருக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
ராஜூ பேச்சு
கோப்பையை கையில் வாங்கிய ராஜூ, “நான் என்னை ஜெயிக்க வையுங்கள் என மக்களிடம் கேட்டிருந்தேன். ஆனாலும் பயந்துகொண்டே இருந்தேன். இந்த வெற்றியில் மற்ற சக போட்டியாளர்களுக்கும் பங்கு உண்டு. மக்களுக்கு நன்றினு சொல்லி அவர்களை தள்ளிவைக்க விரும்பவில்லை. அதனால் அவர்களுக்கு நான் நன்றி சொன்னதே இல்லை. இருந்தாலும் நன்றி” என தெரிவித்தார்.