www.garudabazaar.com

சம்பவமே இனிதான் ஆரம்பிக்குது.. வனிதா உட்பட அறிமுகமான 5 பேர்! BiggBoss Ultimate

முகப்பு > சினிமா செய்திகள்

By |

VijayTelevision: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் 5 சீசன்களாக ஒளிபரப்பாகி நிறைவடைந்தது.

BiggBoss OTT BiggBoss Ultimate 5 mates including vanitha

Bigg Boss Tamil 5:

அண்மையில் இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வந்தது. இதில் ராஜூ வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவில் கடைசியாக 5 பேர் இருந்தனர். அவர்களின் ராஜூ மற்றும் பிரியங்கா இருவரும் கடைசிவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தனர். இதில் ராஜூ வெற்றியளராகவும் பிரியங்கா ரன்னர்-அப்பாவும் கமல்ஹாசனால் அறிவிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற ராஜூவுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காசோலை வழங்கப்பட்டது.

பிக்பாஸ் ஓடிடி

அதன் பின்னர் அதே மேடையில், நடிகர் கமல்ஹாசன் 24 மணி நேரமும் ஓடக்கூடிய புதிய பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி பற்றிய அறிமுகத்தை நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்படி பிக்பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த நிகழ்ச்சி டிஸ்னி+ ஹாட் ஸ்டார் தமிழ் சேனலில் நேரடியாக 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அவர் அந்த நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார்.

தோத்த இடத்தில் தானே ஜெயிக்க முடியும்? 

இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் தெரிய வந்தன. அதாவது முந்தைய சீசன் பிக் பாஸ் போட்டியாளர் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று கமல்ஹாசன் அறிவித்ததுடன், அடுத்த ப்ரோமோவில் புதிய தகவலையும் வெளியிட்டு இருந்தார். அதில் தொலைத்த இடத்தில் தான் தேட முடியும், தோத்த இடத்தில் தான் ஜெயிக்க முடியும் என்கிற பஞ்ச் வசனத்துடன் கமல்ஹாசன், புது வியூகத்துடன் பழைய போட்டியாளர்கள் வரவிருப்பதாக கூறினார்.

வனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி

அதன்படி ஏற்கனவே  முந்தைய சீசனில் கலந்துகொண்ட சினேகன், ஜூலி உள்ளிட்டோர் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில், கலந்து கொள்ளக்கூடிய புரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதேபோல் வனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடம்பெறக்கூடிய அடுத்த ப்ரோமோக்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. 

இனி தான் சம்பவமே இருக்கு

முன்னதாக வனிதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் ஒரு குடுகுடுப்பை காரர் வந்து வனிதா வீட்டு வாசலில் நின்று, அவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகக் குறி சொல்வது போன்றதொரு தாறுமாறான ப்ரொமோ விஜய் டிவி மற்றும் டிஸ்னி+ஹாட் ஸ்டார் வெளியானது. இந்நிலையில் வனிதா பங்குபெறும் புதிய ப்ரோமோவில் அவரே தோன்றி “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. இனி தான் சம்பவம் ஆரம்பம்” என்று சொல்லும் புதிய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி

இதேபோல், முந்தைய சீசனில் பங்குபெற்ற நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி, சமையல் சக்ரவர்த்தியாகி, கிச்சனில் நின்று சமைத்துக் கொண்டிருக்கும் புதிய ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் சமையலை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் சுரெஷ் சக்ரவர்த்தி, ஜாடை மாடையாக பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் உளவியல் பற்றியும் பேசுகிறார்.

BiggBoss OTT BiggBoss Ultimate 5 mates including vanitha

இதேபோல் பேசாமொழி நாட்டியமாடி ‘நேர்கொண்ட பார்வை’ நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை அபிராமி பிக்பாஸ் ஓடிடி போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். 

Also Read: அதானே..  இவர் இல்லாமலா? நெவர்!.. பலரும் மிஸ் பண்ணும் குக் வித் கோமாளி பிரபலம் திரும்பவும் வராரா?

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss OTT BiggBoss Ultimate 5 mates including vanitha

People looking for online information on BiggBossOTT, BiggBossUltimate, Suresh Chakravarthy, Vanitha will find this news story useful.