www.garudabazaar.com
iTechUS

ரஞ்சிதமே பாடலுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்த ஷிவின்.. விக்ரமன் அடிச்ச கமெண்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 இன்றுடன் நிறைவுபெற இருக்கிறது. இதனிடையே இந்த சீசனின் வெற்றியாளர் யார்? என்பதுதான் இப்போது சமூக வலை தளங்களில் பேச்சாக இருக்கிறது.

Shivin Teaches Dance Movements To vikraman in BB6

முன்னதாக, Finale விற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து தான் வெளியேறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருந்தார். இப்படி பரபரப்பான சம்பவங்களுக்கு இடையே பிக்பாஸ் மிட் வீக் எவிக்ஷன் மூலமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில் வீட்டுக்குள் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே இருக்கின்றனர். இன்று இறுதி நாள் என்பதால் பல சுவாரஸ்யமான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் வீட்டுக்குள் ஷிவின் ரஞ்சிதமே பாடலுக்கு விக்ரமனுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கிறார். ரஞ்சிதமே பாடலுக்கு நடன அசைவுகளை ஷிவின் சொல்லிக் கொடுக்க, விக்ரமன் அதனை பார்த்து பின்னர் அவரும் ஆடுகிறார். தனக்கு பரிசாக வந்த கருப்பு நிற ஆடைகளை அணிந்திருக்கும் விக்ரமன் ஷிவினை மட்டும் நடனமாட சொல்கிறார். அப்போது ஷிவின்," வாங்க விக்ரமன் ரெண்டு பேரும் கருப்பு ட்ரெஸ் போட்ருக்கோம். டான்ஸ் ஆடலாம். இரண்டாவது ஸ்டெப் தெரியுமா?" என கேட்கிறார்.

அவருக்கு பதில் சொல்லும் விக்ரமன்,"உங்க வேலையை நீங்க பாருங்க ஷிவின். என் ஸ்டெப்-அ மட்டும் பாருங்க" எனச் சொல்கிறார். அதன் பின்னர் இருவரும் புன்னகையுடன் நடனமாடுகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Shivin Teaches Dance Movements To vikraman in BB6

People looking for online information on Biggboss6Tamil, Shivin, Vikraman will find this news story useful.