www.garudabazaar.com
iTechUS

"வெளியே போனதும் கல்யாணம் பண்ணுங்க விக்ரமன்.. உங்க அறப்பணிகளுக்கு விழுதா இருப்பேன்" - ஷிவின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று மாலை நடைபெற இருக்கும் கிராண்ட் ஃபினாலே-வில் இந்த சீசனின் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

Shivin said she will help vikraman for his legal aid in BB House

முன்னதாக, Finale விற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன், கதிர் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பணப்பெட்டியுடன் அமுதவாணன் வெளியேற, மிட் வீக் எவிக்ஷன் மூலமாக மைனாவும் வெளியேறினார். தற்போதைய சூழ்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இன்று மாலை Finale நடைபெற இருப்பதால் வெற்றியாளர் யார் என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பரபரப்புடன் பேசி வருகின்றனர். இந்த நிலையில், வீட்டுக்குள் ஷிவின் - விக்ரமன் இருவரும் வீட்டுக்குள் தங்களது எதிர்கால திட்டம் குறித்து பேசியுள்ளனர். 

வெளியே சென்றதும் திருமணம் செய்துகொள்ளும்படி ஷிவின் விக்ரமனிடம் கூறுகிறார். அதனை மறுக்கும் விக்ரமன் தன்னுடைய கனவு ட்ரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அதற்கான பணிகளில் ஈடுபட இருப்பதாகவும் விக்ரமன் கூறுகிறார்.

அப்போது ஷிவின்,"நீங்க கல்யாணம் பண்ணுங்க. உங்க கல்யாணத்துக்கு பரிசா அந்த ட்ரஸ்ட்-அ திறந்து உங்களுக்கு கொடுக்குறேன். உங்களோட விழுதா இருந்து நான் அந்த வேலைகளை செய்யுறேன்" என்கிறார். இதற்கு விக்ரமன்,"இஞ்சி பூண்டு விழுதா?" என புன்னகையுடன் கேட்கிறார்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கான எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியிருந்தனர். அப்போது, விக்ரமன் அறக்கட்டளை ஒன்றை நிறுவி சமூக பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்திருந்தது. அதன்பின்னர் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் ஒருவேளை தான் பணப்பெட்டியை எடுத்தால் ட்ரஸ்ட் துவங்கிவதற்கு தன்னால் ஆன உதவிகளை நிச்சயம் செய்வதாகவும் ஷிவின் விக்ரமனிடத்தில் கூறியிருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Shivin said she will help vikraman for his legal aid in BB House

People looking for online information on Biggboss6Tamil, Shivin, Vikraman will find this news story useful.