www.garudabazaar.com
iTechUS

வெளியே போனதும் 'வாத்தி' விக்ரமன் வைத்திருக்கும் மாஸ் திட்டம்.!.. அவரே சொன்ன பரபரப்பு பதில்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 இன்று மாலையுடன் நிறைவுபெற இருக்கிறது. இதனிடையே இந்த சீசனின் வெற்றியாளர் யார்? என்பதுதான் இப்போது சமூக வலை தளங்களில் பேச்சாக இருக்கிறது.

Shivin asks vikraman about his marriage in BiggBoss 6

முன்னதாக, Finale விற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து தான் வெளியேறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருந்தார். இப்படி பரபரப்பான சம்பவங்களுக்கு இடையே பிக்பாஸ் மிட் வீக் எவிக்ஷன் குறித்து வெளியிட்ட அறிவிப்பு போட்டியாளர்களை திகைக்க வைத்திருந்தது. இதில் மைனா வெளியேற்றப்பட்டார்.

தற்போதைய சூழ்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இன்று மாலை Finale நடைபெற இருப்பதால் வெற்றியாளர் யார் என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பரபரப்புடன் பேசி வருகின்றனர். இந்த நிலையில், வீட்டுக்குள் ஷிவின் - விக்ரமன் இடையே சுவாரஸ்யமான வாக்குவாதமும் நடைபெற்றிருக்கிறது.

முன்னதாக, தனக்கு பரிசாக வந்த கருப்பு நிற உடைகளை விக்ரமன் அணிந்திருந்தார். அப்போது அருகில் நிற்கும் ஷிவின்,"வெளியே போயிட்டு ஹனிமூன் ட்ரிப்-கு பிளான் பண்ணுவீங்க. சும்மா சொன்ன நாடுகளுக்கு எல்லாம் நேரா போவீங்க" என்கிறார். அதற்கு விக்ரமன்,"ஏங்க காமெடி பண்றீங்க. வெளியே போட்டு வச்சிருந்த பிளான் எல்லாம் அப்படியே இருக்கும். ட்ரஸ்ட் ஆரம்பிக்கிற வேலையை பார்க்கணும்" என்கிறார்.

 தொடர்ந்து ஜாலியாக பேசும் விக்ரமன்,"நான் வந்த முதல் நாள்ல இருந்து என்னை முடிச்சு அனுப்பனும்-னு தான் உங்களோட பிளான். ஆனா நான் மீறி வந்துட்டேன்" என சிரித்துக்கொண்டே கூறுகிறார். அப்போது ஷிவின்,"உங்களை யாராவது முடிச்சு அனுப்ப முடியுமா விக்ரமன்?" என புன்னகையுடன் கேட்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Shivin asks vikraman about his marriage in BiggBoss 6

People looking for online information on Biggboss6Tamil, Shivin, Vikraman will find this news story useful.