ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 29-ந்தேதி வெளியான 2.0 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

பல்வேறு உலக நாடுகளிலும் வெளியாகி வரும் இப்படம் ஜூலை 12-ந்தேதி சீனாவில் வெளியாக உள்ளது. சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 2.0 படம், பாலிவுட்டில் ரோபோட் 2.0 என்ற பெயரில் வெளியாது. இதே டைட்டீலுடன் தற்போது சீனாவிலும் வெளியாக உள்ளது. எச்.ஒய் என்ற நிறுவனம் இப்படத்தை சீனாவில் பிரமாண்டமாக வெளியிடுகிறது.
மேலும், ரூ.550 கோடி பட்ஜெட்டில் தயாரான 2.0 படம் இதுவரை ரூ.800 கோடி வசூலித்துள்ளது. அதனால் சீனாவில் வெளியாகும்போது அதன் வசூல் ஆயிரம் கோடியை தாண்டி விடும் என்கிறார்கள்.