இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படம் குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த 1991-ல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி, ஷோபனா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘தளபதி’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், மீண்டும் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரஜினி சார் அற்புதம். அவரது எனர்ஜி இன்னும் அவரை இளமையாக்குகிறது. தளபதிக்கு பிறகு மீண்டும் அவரை படம்பிடிக்கிறேன்..’ என ட்வீட் செய்துள்ளார்.
‘தர்பார்’ படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் மும்பையில் நடந்து முடிந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையடுத்து சிறிய இடைவெளிக்குப் பிறகும் அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்காக ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார்.
Rajini Sir is awesome - his energy makes him younger😃👌.. filming him after Thalapathi 🙏
— SantoshSivanASC. ISC (@santoshsivan) May 30, 2019