இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் தற்போது விஜய் - அட்லி இணைந்துள்ள 'தளபதி 63' படத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஜேஷ்தீப் ஜோஷி எனும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மரியான் படத்தில் இடம் பெற்ற இன்னும் கொஞ்சம் இருந்தா தான் என்ன ? என்கிற பாடலை பாடுகிறார்.
அவர் பாடும் போது தமிழ் உச்சரிப்பு ஓரளவுக்கு சரியாகவே இருக்கிறது. இந்த பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான், பஞ்சாபிலும் தமிழ் பரவுகிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு கடந்த 1ஆம் தேதியன்று புதிய கல்வி கொள்கைக்கான வரைவுகளில் ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஹந்தியை பாடமாக்கவிருப்பதாக தகவல்கள் பரவியது. இதற்கு சமுக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
அவர் எழுதிய மற்றொரு பதிவில், ''அழகிய தீர்வு 🌹🇮🇳 ”தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Tamizh is spreading in Punjab 😀 https://t.co/VU9q17c9e5
— A.R.Rahman (@arrahman) June 2, 2019