ஷங்கர்-கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’-வில் நீங்களும் இணைய வேண்டுமா? - சூப்பர் Offer இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 26, 2019 07:13 PM
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர், நடிகையருக்கான தேர்வு நடைபெறுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இரண்டாம் பாகமாக உருவாகவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையருக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின்படி, நடிகை பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாகவும், படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனவும் நாம் ஏற்கனவே செய்திகள் வெளியிட்டிருந்தோம்.
தற்போது, தயாரிப்பு நிறுவனமான லைகா ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எவ்வித வயது வரம்புமின்றி துணை கதாபாத்திரங்களில் நடிக்க ‘ஆர்வமுள்ள, நடிப்பில் தேர்ந்த’ நடிகர், நடிகையர்கள் தங்களது சுய விவரங்களை குறிப்பிட்ட இமெயிலுக்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவித்துள்ளது.
🎥 Casting Call 📣
We are on the lookout for interested and trained actors for supporting roles in the film #Indian2 🔥🔥 @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @sreekar_prasad @muthurajthangvl pic.twitter.com/8fw03eyC9d
— Lyca Productions (@LycaProductions) July 26, 2019