www.garudabazaar.com

அடேங்கப்பா, ஒரு பாட்டுக்கு இத்தன கோடியா?.. ஷங்கர் - ராம்சரண் இணையும் RC15.. பிரம்மாண்ட அப்டேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர் - ராம் சரண் இணையும் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

shankar and ramcharan rc15 song shooting update sources

Also Read | "என் அப்பா ஃப்ரண்ட் மாதிரி, பையன் கிரிக்கெட் பிளேயர்".. ஃபேமிலி குறித்து மனம் திறந்த GVM!!

"RC15" என தற்போது குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கர் மற்றும் ராம்சரண் ஆகியோர் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார்.

shankar and ramcharan rc15 song shooting update sources

இவர்களுடன் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரும் இணைந்துள்ளார். RC15 படத்தின் படப்பிடிப்பு, மகாராஷ்டிரா, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நடைபெற்றிருந்தது.

shankar and ramcharan rc15 song shooting update sources

இந்நிலையில், இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதற்கு மத்தியில், இந்த பாடல் குறித்து இன்னும் சில தகவல்களும் தற்போதும் தெரிய வந்துள்ளது.

கடுமையான பனி மூட்டம் காரணமாக இந்த பாடலின் ஷூட்டிங் தற்போது நியூசிலாந்தில் நடைபெறவில்லை என்றும், நவம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை இந்த பாடலின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டம் போட்டுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

shankar and ramcharan rc15 song shooting update sources

அதே போல, 15 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த பாடல் உருவாக்கப்பட உள்ளதாகவும், தென் இந்தியாவில் ஒரு பாடலுக்கான அதிக பட்ஜெட்களில் இதுவும் ஒன்று என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

Also Read | "இந்திய சினிமால இப்டி நடந்ததில்ல போல".. 'புஷ்பா 2' படத்துக்காக ரசிகர்கள் செஞ்ச விஷயம்!!

தொடர்புடைய இணைப்புகள்

shankar and ramcharan rc15 song shooting update sources

People looking for online information on Ram Charan, RC15, RC15 song shooting, Shankar will find this news story useful.