www.garudabazaar.com

ஷங்கர் & ராம் சரண் இணையும் RC15.. ரிலீஸ் எப்போ..? வெளியான செம்ம தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர் - ராம் சரண் இணையும் RC15 படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Director Shankar RC15 grand release on April 13th 2023

RC15 படத்தின் துவக்க விழா கடந்தாண்டு செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது. RC15 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு   ஐத்ராபாத் & விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சில நாட்களுக்கு முன் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Shankar RC15 grand release on April 13th 2023

People looking for online information on Ramcharan, RC15, Release date, Shankar will find this news story useful.