Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

பிரபல 80ஸ் நடிகையுடன் செமயாக டான்ஸ் ஆடிய அதிதி ஷங்கர்.. வைரலாகும் சூப்பர் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அதிதி ஷங்கர் பிரபல 80ஸ் நடிகையுடன் ஆடிய நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aditi Shankar Dance with Actress Radhika Sarath kumar

Also Read | "ஆதி புருஷ் டீஸர் பார்த்தபோது குழந்தையாக மாறி விட்டேன்".. - மனம் திறந்த நடிகர் பிரபாஸ்

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளிவந்த விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.  யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்தார், மாநகரம் புகழ் எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, அனல் அரசு சண்டைப் பயிற்சி இயக்குனராக பணிபுரிந்தார்.

Aditi Shankar Dance with Actress Radhika Sarath kumar

இந்த படத்தில்  ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்தனர். 

விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அதிதி ஷங்கர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .

Aditi Shankar Dance with Actress Radhika Sarath kumar

சமீபத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 9 நாளுக்கு 9 தீமில் அதிதி ஷங்கர் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்.

அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Aditi Shankar Dance with Actress Radhika Sarath kumar

இந்நிலையில் பிரபல ஜவுளி நிறுவனத்தின் தீபாவளி விளம்பர படத்தில் நடிகை அதிதி ஷங்கர் நடித்திருந்தார். அதிதி ஷங்கருடன் நடிகை ராதிகா சரத்குமாரும் அந்த விளம்பரத்தில் தோன்றி இருந்தார். இச்சூழலில் அந்த விளம்பரத்தின் உருவாக்க வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதிதி ஷங்கர் & ராதிகா இருவரும் இணைந்து ஆடும் இந்த நடன வீடியோ காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | சர்தார் படத்தின் முதல் சிங்கிள் பாடல்.. கார்த்தி குரலில் பக்காவான குத்து பாடல்? செம அப்டேட்

பிரபல 80ஸ் நடிகையுடன் செமயாக டான்ஸ் ஆடிய அதிதி ஷங்கர்.. வைரலாகும் சூப்பர் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Aditi Shankar Dance with Actress Radhika Sarath kumar

People looking for online information on Aditi Shankar, Radhika Sarathkumar will find this news story useful.