www.garudabazaar.com

"நடிப்பிற்கு தற்காலிக ஓய்வு".. ஆமீர்கான் அறிவிப்பு.. அடுத்த பிளான் இதுதானா?.. வெளியான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆமிர்கான் நடிப்பில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Aamirkhan says he will take a year and a half break from acting

Also Read | "அவர் கத்துக்கொடுத்த பாடம்..".. மகேஷ்பாபுவின் தந்தை மறைவுக்கு இயக்குனர் SS.ராஜமௌலி உருக்கம்..!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் ஆமிர்கான். இவருடைய நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் லால்சிங் சத்தா. 1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தின் ரீமேக்கில் (லால்சிங் சத்தா) டாம் ஹாங்க்ஸ் நடித்த  கம்ப் கதாபாத்திரத்தில் ஆமிர் கான் நடித்திருந்தார்.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளை பாரஸ்ட் கம்ப் படம் வென்று குவித்தது. இந்த லால்சிங் சத்தா படத்தில் ஆமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரித்திருந்தார்.

Aamirkhan says he will take a year and a half break from acting

இதனிடையே  நடிப்பில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க இருப்பதாகவும், தொடர்ந்து பட தயாரிப்பில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் ஆமிர் கான். இதுபற்றி அவர் பேசுகையில்,"நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகியிருக்க விரும்புகிறேன். நான் என் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன், என் அம்மா மற்றும் என் குழந்தைகளுடன் இருக்க ஆசைப்படுகிறேன். நான் ‘சாம்பியன்ஸ்’ படத்தைத் தயாரிப்பேன். ஏனென்றால் நான் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Aamirkhan says he will take a year and a half break from acting

கடந்த 2018 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் மொழியில் வெளியான படம் Campeones. இந்தப் படத்தை  Javier Fesser இயக்கியிருந்தார். இந்நிலையில், இந்த படத்தை சாம்பியன்ஸ் என ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார் ஆமிர் கான். இதனை 'கல்யாண சமையல் சாதம்' மற்றும் 'சுப் மங்கள் சாவ்தான்' ஆகிய படங்களை இயக்கிய ஆர்.எஸ் பிரசன்னா இயக்க உள்ளார். ஏற்கனவே, இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஆமிர் கான் நடிப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், நடிப்பில் இருந்து தற்காலிகமாக ஓய்வில் இருப்பதாக அறிவித்திருக்கும் அவர், இப்படத்தை தயாரிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

Also Read | பிரேமம் புகழ் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் 'GOLD'.. ரிலீஸ் எப்போ? வெளியான மாஸான தகவல்..!

Tags : Aamir Khan

தொடர்புடைய இணைப்புகள்

Aamirkhan says he will take a year and a half break from acting

People looking for online information on Aamir Khan will find this news story useful.