www.garudabazaar.com

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு துபாய் அரசு கொடுத்த மிகப்பெரிய அந்தஸ்து! வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு துபாய் அரசு மிகப்பெரிய அந்தஸ்தை வழங்கி உள்ளது.

Yuvan Shankar Raja Granted Golden Visa by Dubai UAE Government

Also Read | நாள் பூரா வெடித்த சண்டை.. தனா & மணி. இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க.. 😍 Bigg Boss 6 Tamil

இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய 16 ஆவது வயதில் அரவிந்தன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அவருக்கு முதல் வெற்றிப்படமாக அமைந்தது அஜித் முருகதாஸ் கூட்டணியில் உருவான ’தீனா’ திரைப்படம்.  அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றியுள்ள யுவன் ஷங்கர் ராஜா  இதுவரை 150 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு இசையமைப்பாளரான அறிமுகம் ஆன யுவன், இந்த 25 ஆண்டுகளில் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதுபோல செல்வராகவன், வெங்கட்பிரபு, அமீர், ஏ ஆர் முருகதாஸ், ராம், ஹரி, H. வினோத் என முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

Yuvan Shankar Raja Granted Golden Visa by Dubai UAE Government

இதுவரை 150+ படங்களில் பணியாற்றியுள்ள யுவன், ரசிகர்களைக் கவர்ந்த பல பாடல்களைக் கொடுத்துள்ளார். 

யுவன் தனது இசையில் மெலடி, சோகப்பாடல்கள், குத்துப்பாடல்கள் என எல்லா வகையிலும் ஹிட்களைக் கொடுத்துள்ளார். குறிப்பாக யுவனின் பின்னணி இசையமைப்புகளும் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்தவை.

Yuvan Shankar Raja Granted Golden Visa by Dubai UAE Government

யுவன் ஷங்கர் ராஜா, சமீபத்தில் (31.08.2022) தனது பிறந்த நாளை கொண்டாடி இருந்த நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். சமீபத்தில்  யுவனுக்கு சத்யபாமா பல்க்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா, சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மசூதிக்கு உம்ரா புனித பயணம் சென்றார். யுவன், இஹ்ராம் அணிந்து கொண்டு உம்ரா புனித பயணம் செய்த புகைப்படங்கள்  ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

இந்நிலையில் துபாய் அரசு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

Yuvan Shankar Raja Granted Golden Visa by Dubai UAE Government

குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் திறமையானவர்களை கௌரவிக்கும் வகையில்  ஐக்கிய அமீரக அரசால்  கொண்டுவரப்பட்டது தான் கோல்டன் விசா.

இந்தியாவின் முக்கியமான விளையாட்டு வீரர்கள், நடிகர் நடிகைகள் பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகின்றன. பத்து வருடங்கள் வரை ஐக்கிய அமீரகத்தில் தங்கும் வசதி கொண்ட சிறப்புமிக்க விசா தான் இந்த கோல்டன் விசா. இதை வைத்திருக்கும் வெளிநாட்டவர்களும் அமீரக நாட்டு குடிமக்கள் போலவே கருதப்படுவார்கள். இந்த கோல்டன் விசாவை பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது.

Also Read | "ரொம்ப பதட்டமா இருக்கேன்".. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சமந்தாவின் இன்ஸ்டா பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan Shankar Raja Granted Golden Visa by Dubai UAE Government

People looking for online information on Dubai UAE Government, Golden Visa, Yuvan Shankar Raja will find this news story useful.