www.garudabazaar.com

நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மரணம்.. நடிகை மீனாவின் உருக்கமான பதிவு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் கொண்டாடப்படும் நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான போஸ்ட் ஒன்றை எழுதியுள்ளார்.

Maheshbabu Father demise Actresses Meena emotional Post

Also Read | பிரேமம் புகழ் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் 'GOLD'.. ரிலீஸ் எப்போ? வெளியான மாஸான தகவல்..!

தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா கட்டமனேனி நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Maheshbabu Father demise Actresses Meena emotional Post

அங்கே அவருக்கு CPR செய்யப்பட்ட நிலையில் இருதய, நரம்பியல் மற்றும் அவசரநிலை வல்லுநர்கள் அடங்கிய பல்துறை மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை கிருஷ்ணா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். மேலும், அந்தப் பதிவில்,"செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஆழ்ந்த இரங்கல்கள். குடும்பத்திற்கு நிறைய அன்பும் பிரார்த்தனைகளும்" எனக் குறிப்பிட்டு மகேஷ் பாபுவை டேக் செய்திருக்கிறார்.

80 வயதான கிருஷ்ணா, இதுவரையில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் மக்கள் இவரை கொண்டாடுகின்றனர். கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ இல் நடித்திருந்தார். கிருஷ்ணா நடிகர் மட்டும் அல்லாது வெற்றிகரமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். திரையுலகில் இவருடைய பங்களிப்பை பாராட்டும் விதமாக 2009 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணாவின் மறைவு இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Also Read | "நடிப்பிற்கு தற்காலிக ஓய்வு".. ஆமீர்கான் அறிவிப்பு.. அடுத்த பிளான் இதுதானா?.. வெளியான தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Maheshbabu Father demise Actresses Meena emotional Post

People looking for online information on Krishna Ghattamnaneni, Mahesh Babu, Mahesh Babu father, Mahesh Babu father Krishna Ghattamnaneni, Maheshbabu Father demise, Meena, Meena emotional Post will find this news story useful.