www.garudabazaar.com

கதறும் ரசிகர்கள்! பிரபல சன்டிவி சீரியலுக்கு குட்‌பை சொல்லி ஷாக் கொடுத்த ஹீரோயின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலில் இருந்து அடிக்கடி பல நட்சத்திரங்கள் விலகுவதும் பின்னர் மாற்று சீரியலில் இணைவதும் தற்போது நடந்து வருகிறது.

serial artist poovarasi radhika preethi left the serial

"பாலாஜி..என்னைய தப்பா காட்டி உங்கள நல்லவரா காட்டிகிறீங்க" - தாடி பாலாஜி மனைவி ஆவேசம் !

அதிலும் வானத்தைப்போல என்ற தொடரில் அண்ணன்-தங்கை மையப்படுத்தி வரும் கதாபாத்திரத்தில் நடித்த சின்ராசு, துளசி கதாபாத்திரங்களுக்கு பதிலாக, மாற்று கதாநாயகர்கள் இடம்பெற்ற நிலையில் ரசிகர்களுக்கு ஏன்? என்ற காரணம் தெரியாமல் குழம்பி இருக்கும் நிலையில்,  தற்போது மிக பிரபலமாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் "பூவேஉனக்காக" என்ற தொடரில் ஆரம்பத்தில் நடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகளான ஜோவிதா இந்த தொடரில் என்ட்ரீ கொடுத்தார்.

பிறகு, விலகிய ஜோவிதா சன் டிவியில் அருவி என்கிற தொடரில் கதாநாயகியாக தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் பூவே உனக்காக தொடரில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவரும் சீரியலில் இருந்து விலகினார். அதன்பின் கதாநாயகனாக அசிம் பூவே உனக்காக தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்தார். பின்னர் பூவரசி, அசிம் ஜோடி பலரையும் கவர்ந்தது. முன்னதாக, சீரியலில் நடிகர்களின் மாற்றத்திற்குப் பிறகு  தான்.

சீரியல் டிஆர்பி ஆரம்பத்தைக் காட்டிலும், இருவரின் chemistry - யால் வெற்றிகரமாக ஓடி  பூவே டிஆர் -இல் ஹிட்டடிக்க தொடங்கி இருந்தது.

 

serial artist poovarasi(radhika preethi) left the serial

பலருக்கும் பூவே உனக்காக சீரியலின் ஹீரோ மற்றும் ஹீரோயினின் கெமிஸ்ட்ரி  நன்றாக செட்டாகி பலரது மனதையும் கொள்ளை கொண்டது. மேலும் பல ரசிகர்களை சீரியல் பார்ப்பதற்கும் அன்றாடம் என்ன நடக்கிறது என்பதனை பார்க்க தூண்டும் வகையில் ப்ரோமோ முதலியவை நன்றாக ஹிட்டடித்தது. தற்போது ஹீரோயின் விலகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

மேலும், இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது யாதெனில், பூவே உனக்காக தொடரிலிருந்து மிகவும் கஷ்டத்துடன் நான் விலகி இருப்பதாக ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், எனக்கு வாய்ப்பு கொடுத்த சன் டிவிக்கும், மேலும் புரோடக்சன் ஹவுசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

ரசிகர்களிடம் கண்டிப்பாக என் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தடுத்த வெற்றிப் படிகளில் என்னுடன் இருப்பீர்கள் என எனக்கு தெரியும் என்றும், உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் என்றும் "இப்படிக்கு பூவரசி" என பதிவிட்டிருக்கிறார். இவரின் இந்த திடீர் விலகல் பல ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனிதா வெளியே போயிட்டாரா? .. ப்ரோமோவுல காணும்?.. என்ன ஆச்சு? biggbossultimate

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

serial artist poovarasi radhika preethi left the serial

People looking for online information on சன் டிவி, பூவேஉனக்காக, Poovarasi, Poove unakkaaka, Radhika Preethi, Serial artist, SunTV will find this news story useful.