Reliable Software
www.garudabazaar.com

'சந்தானத்தின் புதிய படம்!'.. சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய பிரபல டிவி சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சபாபதி.

Santhanams Sabhaapathy Satellite ,digital rights SunTV acquires

பிஸ்கோத் படத்தை தொடர்ந்து டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களில் நடிகர் சந்தானம் நடித்து வந்தார். இதில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சபாபதி திரைப்படத்தில் சந்தானம் நடித்திருந்தார். ஆர்.கே.என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கிற இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது.

தந்தை-மகன் புரிதலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படதிற்கு சபாபதி என பெயரிடப்பட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 21-ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் சந்தானத்தின் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணா, லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை சன்.டிவி கைப்பற்றியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. 

Tags : Santhanam

தொடர்புடைய இணைப்புகள்

Santhanams Sabhaapathy Satellite ,digital rights SunTV acquires

People looking for online information on Santhanam will find this news story useful.