www.garudabazaar.com
www.garudabazaar.com

பிரபல சீரியல் ஹீரோ திருமணம்... வெளியான புகைப்படங்கள்.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து பலரும் தங்கள் திருமணம் மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்தனர். இந்நிலையில் ஊரடங்கு தற்போது தளர்வுபடுத்தப் பட்டுள்ள நிலையில் பல பிரபலங்களும் வரிசையாக தங்கள் திருமணம் பற்றிய செய்திகளை அறிவித்து வருகின்றனர்.

Popular serial artist got hitched பிரபல சீரியல் ஹீரோ திருமணம்

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முற்றிலும் வேறுபட்ட கதைக்களம் கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வரும் "ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி' சீரியலி ன் ஹீரோ தற்போது திருமணம் செய்துள்ளார். உடல் பருமனான ஒரு பெண் திருமணத்திற்காக அனுபவிக்கும் கொடுமைகளையும், அதன் பிறகு புகுந்த வீட்டில் அவர் எவ்வாறு கஷ்டப்படுகிறார் என்பதையும், அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதையும் காட்டும் தொடர்தான் ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, இது திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு ஒன்பதரை மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலின் ஹீரோ புவியரசு தற்போது மோகனப்பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இவர்களை ஜீ தமிழ் நடிகர்களும் கலைஞர்களும் நேரில் சென்று வாழ்த்தி உள்ளனர். அதுவும் அந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் அஸ்வினி மணமக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : Zee Tamil

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular serial artist got hitched பிரபல சீரியல் ஹீரோ திருமணம்

People looking for online information on Zee Tamil will find this news story useful.