www.garudabazaar.com

பிரபல தமிழ் சீரியலில் இணையும் ‘திருடா திருடி’ சாயா சிங்!!..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்களுக்கு வெகுவான ரசிகர்கள் உள்ளனர்.

Thiruda Thirudi heroine Chaya Singh entry popular suntv serial

ஒருபக்கம் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இன்னொருபுறம் சீரியல்களுக்கான வரவேற்பு சற்றும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில்தான் சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியலில் பிரபல நடிகை சாயா சிங் இணைகிறார்.

Thiruda Thirudi heroine Chaya Singh entry popular suntv serial

முன்னதாக  திருடா திருடி படத்தின் நாயகியாகவும் மற்றும் மன்மத ராசா பாடல் மூலமும் பிரபலமான நடிகை சாயா சிங் அதன் பிறகு பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தவர் 2011-இல் சன் டி.வியில் ஒளிபரப்பான ‘நாகம்மா’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு சாயாசிங் அறிமுகமானார். வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலுமே பிஸியாக இருக்கும் தமிழ் நடிகையான சாயாசிங், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் ‘தெய்வமகள்’ சீரியலில் பிரகாஷ் என்கிற கேரக்டரில் நடித்த பிரபல சீரியல் நடிகர் கிருஷ்ணாவை கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Thiruda Thirudi heroine Chaya Singh entry popular suntv serial

சன் டி.வியில் ஒளிபரப்பான ‘ரன்’ சீரியலில் கிருஷ்ணா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அவருடன் இணைந்து நடித்திருக்கிறார் சாயா சிங். இந்த நிலையில் தான் சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியலில் புதிதாக இணைந்திருப்பதாக சன் டி.வி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

Thiruda Thirudi heroine Chaya Singh entry popular suntv serial

‘பூவே உனக்காக’ சீரியலைப் பொறுத்தவரை நாயகி பூவரசி தற்போது மிகப் பெரும் ஆபத்தில் இருக்கிறார். மனைவி பூவரசியை காப்பாற்றுவதற்கு நாயகன் கதிர் புதிய வேடத்தில் அவருடனேயே இருக்கிறார். இந்த நிலையில்தான் பூவே உனக்காக சீரியலை இன்னும் சுவாரசியமாக்கும் வகையில் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் நடிகை சாயாசிங்.

சன் டி.வி சீரியல்களை பொருத்தவரை வார வாரம் ஆரவாரம் என்பது போல ஒவ்வொரு ஞாயிறு அன்றும் திரைப்பிரபலங்கள் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து சிறப்பு ஒளிபரப்பு நிகழ்ச்சியில் நடிப்பது உண்டு. இந்நிலையில் பூவே உனக்காக சீரியலில் சாயா சிங் இணைவது என்பது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி இருக்கிறது.

இதனால் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் விறுவிறுப்பான காட்சிகளை காண, ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

Also Read: "அன்பு-வோட வாழும்போதும் உதயா-வ மறக்க முடியல!".. TikTok சுமதி எடுத்த திடீர் முடிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Thiruda Thirudi heroine Chaya Singh entry popular suntv serial

People looking for online information on Chaya Singh, Sun TV, Sun TV Serial, TVActress, TVSerial will find this news story useful.