www.garudabazaar.com

Bakasuran : “பெண்கள் அழகா ப்ரொஃபைல் பிக்சர் வெக்கலாமா?” - மோகன்.G கருத்து குறித்து செல்வராகவன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Selvaraghavan on Girls Profile Pic Opinion Bakasuran Mohan G

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ட்ரீட்.. மரண மாஸ் SK டான்ஸோடு வெளியான மாவீரன் சிங்கிள்!

இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் & முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, பகாசூரன் படம் கல்லூரி பெண்களை மிரட்டியும் அவர்களின் வறுமை சூழலை பயன்படுத்தியும் ஆன்லைன் செயலிகள் மூலம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தும் உண்மை சம்பவங்கள் குறித்த தகவல் தனக்கு தெரியவந்ததாகவும், அதனால் உடனடியாக  அதை படமாக்க வேண்டும் என, தானே வாடிக்கையாளராக சென்று அந்த பெண்களை காவல்துறை மற்றும் பத்திரிகை நண்பர்கள் உதவியுடன் மீட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Selvaraghavan on Girls Profile Pic Opinion Bakasuran Mohan G

Images are subject to © copyright to their respective owners.

இதுபோன்ற ஆன்லைன் பாலியல் குற்றங்களில் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதாகவும், பலரும் இதில் பணத்தை இழந்துள்ளதாகவும், இப்படி பெரும் குற்றப் பின்னணி இதில் உள்ளதாகவும் கூறி மோகன்.ஜி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். செல்போன்களை நாம் நம் பிள்ளைகள் நல்லனவற்றுக்காக பயன்படுத்துவதாக நினைப்போம், பெரும்பாலானோர் நல்ல விதமாக பயன்படுத்தினாலும் சிலர் பணம் சம்பாதிக்கும் மோகம், தவறுதலான மிரட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு பயந்து இப்படியான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மொபைல் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அவசியம் என பேசிய மோகன்.ஜி, அதை பற்றியே பகாசூரன் படம் பேசப்போவதாக தெரிவித்தார்.

இந்த பார்வையை கல்லூரி நிகழ்வொன்றில் பேசும்போது முன்வைத்த இயக்குநர் மோகன்.ஜி, “பெண்கள் அழகான ப்ரொஃபைல் பிக்சர்களை சமூக வலைதளங்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் ஃபோட்டோக்களை தவறாக பயன்படுத்துவோரிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க முடியும். அதுதான் ரொம்ப முக்கியம். நீங்க டார்கெட் ஆகிறீர்கள். அதுதான் இந்த பிரச்சனையின் ஆரம்பப் புள்ளி” என கேட்டுக்கொண்டார்.

Selvaraghavan on Girls Profile Pic Opinion Bakasuran Mohan G

Images are subject to © copyright to their respective owners.

இதுபற்றி பிஹைண்ட்வுட்ஸ் பேட்டில் இப்படத்தின் நாயகனும், பிரபல இயக்குநருமான செல்வராகவனிடம் கருத்து கேட்டபோது, “அனைவருக்கும் நியாயம் என பட்டதை செய்ய உரிமை உண்டு. நமக்கு இருக்கும் அதே உரிமை அவர்களுக்கும் இருக்கு. பெண்கள் பல காலங்களாக இப்படியான சிக்கல்களுக்கு ஆட்படுகிறார்கள். அதை நாம் எப்படி தடுக்க போகிறோம் என்பது இருக்கிறது. அதோடு முக்கால்வாசி பெண்கள் கையில்தான் இந்த விஷயங்களுக்கான (ஆரம்பமும் தீர்வும்) இருக்கிறது என்பது மறுக்க முடியாதது. அதற்காக ஒளிஞ்சிட்டு இருக்க வேண்டியதில்லை. பெண்கள் முன்வரவேண்டும். நாமும் மரியாதை கொடுக்க வேண்டும். அதுவும் மாறக்கூடாது. நாம் பேச எதுவும் இல்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | சிவகார்த்திகேயன் பிறந்தநாள்.. வாழ்த்து கூறி Unseen போட்டோவை வெளியிட்ட அடுத்த பட இயக்குனர்!

BAKASURAN : “பெண்கள் அழகா ப்ரொஃபைல் பிக்சர் வெக்கலாமா?” - மோகன்.G கருத்து குறித்து செல்வராகவன்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Selvaraghavan on Girls Profile Pic Opinion Bakasuran Mohan G

People looking for online information on Bakasuran, Mohan g, Selvaraghavan will find this news story useful.